இந்த வன்முறையும், தீக்கிரையாக்கிய கொடூரச் செயல்களும், திங்கள்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் அதாவது செவ்வாயன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லியில் இருந்த சமயத்தில் இது நடைபெற்றது.
திங்களன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் எதிர்ப்பாளர்கள் மசூதிக்கு தீ வைத்ததைக் காண முடிந்தது. சில பகுதிகளில், பெட்ரோல் பம்புகள், பல வாகனங்கள், கடைகள் மற்றும் சில வீடுகள் கூட எரிவதைக் காணலாம்.
ஜாஃபராபாத் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இப்படி கோர வடிவை எட்டக்கூடும் என்று டெல்லி போலீசாருக்கு தெரியாதா?
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்கு முன்னர் டெல்லியில் வன்முறை அதிகரிக்கலாம் என்பதை உணரமுடியாத அளவிற்கு டெல்லி காவல்துறையின் பிரத்யேக உளவுத்துறை மெத்தனமாக இருந்ததா