டில்லியில் உள்ள உத்தர பிரதேச மாநில தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக நகரை விட்டு வெளியேற்ற ஆம் ஆத்மி அரசு நிர்பந்தம் செய்கிறது. அவர்களின் வீடுகளில் உள்ள மின்சாரத்தை துண்டிக்கிறது என உ.பி., மாநில பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதற்கு கூறி டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில், பா.ஜ., தலைவர்கள் அரசியல் செய்வது வருத்தத்திற்குரியது. டில்லியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக மாநிலத்தை விட்டு வெளியேற்றும் வகையில், அவர்களின் வீட்டு மின்சாரத்தை கெஜ்ரவிவால் அரசு துண்டிக்கிறது என யோகி அரசு குற்றம்சாட்டுகிறது. நாட்டை காக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டுமே தவிர, கீழ்தர அரசியலில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மிருதுயுன்ஜெய் தெரிவித்துள்ளதாவது: டில்லியில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை மாநிலஅரசு வெளியேற்றியுள்ளது. மழை பெய்த போது, அவர்களுக்கு உணவும் வழங்கவில்லை. தங்க ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், யோகி அரசுதான் அவர்களுக்கு உணவு, தங்கும் இடம், பஸ் வசதியை ஏற்படுத்தியது. பொய் சொல்லி உங்களை காப்பாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். தொற்று நோய் பரவலின் போது கூட ஆம் ஆத்மி கீழ்தர அரசியலில் ஈடுபடுகிறது. இவ்வளவு தூரம் அக்கட்சி கீழ் இறங்கி சென்றது ஏன்? இந்த விவகாரத்தில் உ.பி., அரசும், போலீசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வின் பி.எல். சந்தோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடும் நிலையில், சிலர் நாடு தோல்வியடைய வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களை நாடு மன்னிக்காது என தெரிவித்துள்ள அவர், 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவை மீற எப்படி அனுமதிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில் உள்ள உத்தர பிரதேச மாநில தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக நகரை விட்டு வெளியேற்ற ஆம் ஆத்மி அரசு நிர்பந்தம் செய்கிறது